புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் - pulungal arisi kanji payangal


புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள் 
Pulungal Arisi Kanji Payangal


காய்ச்சல் , உடல் அசதி மற்றும் செரிமானக் குறைபாட்டை போக்க உதவும் உன்னதமான கஞ்சி


 புழுங்கலரிசி புளிக் கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

  1. புழுங்கலரிசிக் குருணை.          -  200 கிராம்

  2. புளி.                                                -  50  கிராம்

  3. உருவிய முருங்கைக் கீரை.      -  2 கைப்பிடி

  4. மிளகு.                                           -  10 கிராம்

  5. சீரகம்.                                           -  10 கிராம்

  6. தனியா.                                   -  2 தேக்கரண்டி

  7. பூண்டு (தோல் நீக்கி நறுக்கியது)   -  ஒரு கப்                                          

  8. சின்ன வெங்காயம்.                 -   அரை கப்

  9. தண்ணீர்.                                    -   750 மி.லி

  10. உப்பு.                             -  தேவையான அளவு

புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை

முதலில் புழுங்கலரிசிக் குருணையை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு  வறுத்தக்  குருணையை   கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். மிளகு , சீரகம் , தனியா  ஆகியவற்றை அம்மியில் நீர்விடாமல் தூள் செய்து கொள்ள வேண்டும்.குருணை நன்கு வெந்ததும் அதில் புளியைக் கரைத்து ஊற்றி பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்க்க வேண்டும்.



பின்பு அதனுடன் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வெந்தபின்  உருவி வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.நன்கு வெந்ததும் இறக்கி வைத்து பொறுக்கும் சூட்டில் குடித்து வரவும்.





புழுங்கல் அரிசி கஞ்சி பயன்கள்

இந்தக் கஞ்சியை காய்ச்சல் மற்றும் காய்ச்சலினால் உண்டாகும் உடல் அசதி  உள்ளவர்கள் அருந்தி வந்தால் அவற்றிலிருந்து விடுபடலாம்.



மேலும் இந்தக் கஞ்சியை ஜீரணக் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் செரிமானக் குறைபாடு நீங்கி ஜீரண சக்தியை சீராக்க உதவும் உன்னதமான கஞ்சி

Get updates in your Inbox
Subscribe