யானை நெருஞ்சில் செடி பயன்கள்
Yanai Nerunjil uses in tamil
யானை நெருஞ்சில் தாவர அமைப்பு
இதன் இலை அகன்று நீண்டு வளைந்த விளிம்புகளை உடையது யானை நெருஞ்சில் சும்மார் ஒன்றை அடி உயரம் வளரக் கூடியது தண்டுப் பகுதி சற்று தடிமனாகவும் எளிதில் உடையக் கூடியதுமாகும் இலைகள் சற்று மொத்தகமாகவும் ஓர்வகையான நாற்றம் வீசக் கூடியதுமாகும், இத்தாவரம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மலைக்காலங்களில் எளிதில் கிடைக்க கூடியதாய் இருக்கின்றன. இதன் முட்கள் பெரியதாகவும் கடிமையான கூர்மையான முனைகளை உடையது உடலில் படும் இடங்களில் அதிகப்படியான வலியை ஏற்படுத்துகின்றது.
தண்ணீரை எண்ணையாக மாற்றும் மோடிவித்தை
கண்கட்டி வித்தை மோடி வித்தை காட்டுபவர்கள் இதன் இலை சாற்றை வித்தைக்கு பயன்படுத்தும் பாத்திரங்களின் உட்புறத்தில் முன்னதாகவே பூசி காயவைத்து பின் வித்தை காட்டும் சமயத்தில் அப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்து பின் ஊற்றி காட்டுவார்கள் அந்த நீர் எண்ணெய் போன்று காணப்படும் அதற்க்கு பின் உள்ள இரகசியம் யானை நெருஞ்சில் என்ற மூலிகையின் சாறே ஆகும்.
யானை நெருஞ்சில் மருத்துவ பயன் உடைய பகுதி
யானை நெருஞ்சில் சிறு தாவர இணத்தை சேர்ந்து இருந்தாலும் இதன் மருத்துவ பயன் அளவிட முடியாத அளவிற்க்கு பயன் தருகின்றது. இதன் இலை, காம்பு, வேர், பூ ஆகியவை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிரைந்து உள்ளன.
யானை நெருஞ்சில் பொடி மருத்துவ பயன்
யானை நெருஞ்சில் செடி முழு தாவரத்தின் காய வைத்த பொடியும் பாச்சை மூலிகையாக என்னென்ன பலன் தருமோ அவற்றில் எவ்வித குறைபாடும் இல்லாமல் அப்படியே கொடுக்கின்றது. யானை நெருஞ்சில் பொடி அனைத்து நாட்டு மருந்துகடைகளிலும் எளிதில் கிடைக்கின்றது.
யானை நெருஞ்சில் மருத்துவ குணம்
இதன் இலை காம்பு காய் ஆகியவற்றை சமூலமாக எடுத்து வந்து பால் அல்லது நீரில் போட்டு ஒரு கரண்டியால் கலக்கிக் கொண்டே இருந்தால் அத்திராவகம் கெட்டியாகி குழம்பாக மாறும் இதில் சர்க்கரையை கலந்து உள்ளுக்கு (அரைடம்ளர்) தர சிறு நீர் தாராளமாக இறங்கும் நீர் கடுப்பு வெள்ளை படுதல் சொப்பன ஸ்கலிதம் தாது நீர்த்தல் குணமாகும்.
உடல் வீக்கம் குறைய யானை நெருஞ்சில்
சாதாரணமாக உடலில் முகம், கை, முழங்கால் மற்றும் மூட்டுகளில் நீர் தேங்க்கி வீங்கி காணப்படும் இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் நீர் தேங்கி வீக்கமாக உடல் எடை அதிகரித்தது போல் இருப்பார்கள் இந்த வகையான நோய்க்கு நீர்க் கோவை அல்லது நீர்கட்டு எனப்படும். இதற்க்கு இத்தாவரத்தின் இலை மற்றும் வேர் பகுதியை சேகரித்து சுத்தம் செய்து 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்ட வைத்து குடித்துவர நீர் இறங்கி வீக்கம் குறையும்.
தாது விருத்திக்கு யானை நெருஞ்சில்
சமூலத்தை வெண்ணை போல் அரைத்து கொட்டை பாக்களவு எருமை தயிரில் கலந்து காலை ஒரு வேளை 12 நாட்கள் தர தாது கெட்டிபடும், ஆண்மை விருத்தியும் உடல் குளிர்ச்சி உண்டாகி தாம்பத்தியம் நீடிக்கும்.
ஆறாத புண்களுக்கு மருந்து
யானை நெருஞ்சில் இலையை அரைத்து ஆறாத புண்களுக்கு பற்று போட்டு வர விரைவில் குணமாகும். ஒவ்வொரு முறையும் பற்று போடு முன் புண்களை உப்பு சேர்த்த நீரில் கழுவி பின் பற்று போடுவது அவசியம். இது புண்களின் மேல் கிருமிகள் படராமல் இருக்க உதவி செய்கிறது.
சிறுநீரக அடைப்பு நீங்க யானை நெருஞ்சில்
சரிவிகித உணவு இன்மையால் 50 வயதுக்கு மேற்ற பட்ட ஆண்களில் பெருவாரியானவர்களுக்கு சீறுநீரக பை அடைப்பு உள்ளதாகவே மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. சிறுநீரக பையில் சதை வளர்ந்து வந்து மூத்திரம் வெளியாகும் குழாயை அடைத்து சிறுநீரக பையில் வீக்கத்தையும் வலியையும் உண்டக்கும். இதற்க்கு தீர்வாக யானை நெருஞ்சில் விதை, இலை, சிறு நெருஞ்சில் வேர் மற்றும் சீரகம் சேர்த்து முன் சொன்ன அளவு தண்ணீரில் கசாயம் வைத்து கொடுக்க சதை வளர்ச்சி குன்றி சிரமம் இன்றி சிறுநீர் வெளியாகும்.
கல் அடைப்பு நீங்க யானை நெருஞ்சில்
கல் அடைப்பு தீர இதன் வேர் சிறு நெருஞ்சில் வேர், சிறுபீளை சமூலம் சேர்த்து 300 மில்லி தண்ணீரில் கசாயம் வைத்து 100 மில்லியாக சுண்ட வைத்து கொடுக்க சிறுநீரகத்தில் தங்கியுள்ள அனைத்து கற்களும் கறைந்து சிறுநீர் வழியாக சிரமம் இன்றி வெளியாகும். சிறுநீர்க அடைப்பு இல்லாதவர்களும் மாதம் இரண்டு முறை குடிக்க சிறுநீரகத்தில் கல் உண்டாகாமல் பாதுகாக்கும்.